Google
 
Web www.mazalais.com

Enable unicode to view Tamil contents

இணையப் பாட்டியின் இன்மொழி



கிண்டல் சுண்டு

டில்லிக்கு ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
அன்புக் குழந்தைகளே, நல்ல பெயர் எடுத்து மேலே
புகழுடன் சிறந்து விளங்க இந்தக் கவிதையைப் படித்து
அதன் படி நடக்க முயலுங்கள்

நல்ல படிப்பு வேண்டும் குழந்தாய்,
கூடவே விளையாட்டும் வேண்டும்;
நல்ல பக்தி வேண்டும் குழந்தாய்,
அத்னுடன் சக்தியும் வேண்டும்.

கடவுளை நம்ப வேண்டும் குழந்தாய்,
கூடவே உழைப்பும் வேண்டும்;
பெற்றோரை வணங்க வேண்டும் குழந்தாய்,
அத்னுடன் பெரியோரை மதிக்கவும் வேண்டும்;

உயர்ந்தாலும் பணிவு வேண்டும் குழந்தாய்,
கூடவே செய்கையில் புனிதம் வேண்டும்;
ஏழைகளுக்கு இரங்க வேண்டும் குழந்தாய்,
அத்துடன் அவர் பசியாற்ற வேண்டும்.

உண்ணும் முன் பிரார்த்தனை வேண்டும் குழந்தாய்,
நாளும் நன்றியுடன் முடிக்க வேண்டும்;
இறை நாமத்தை ஜபிக்க வேண்டும் குழந்தாய்,
அன்பால் வாழ்க்கை தொடர வேண்டும்.

- அன்புடன் அம்மம்மா விசாலம்

இணையப் பட்டி பக்கம்

Your Feedback for this Song

Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazalais.com newsletter?Yes
No

* Required