![]() |
![]() |
![]()
![]()
![]() ![]() |
|
நம் மழலைஸ் குழந்தை நன்கு தவிழ்ந்து ஓடுவதைப் பார்த்து
மிகவும் பூரிப்பு அடைகிறேன், நல்ல ஊட்ட சத்துள்ள பானம் குடித்து வளருகிறது
இல்லையா? கவிதையிலேயே சொல்லட்டுமா?
குழந்தைகளுக்கு ஒரு டாட் காம்,
அதுதான் நம் மழலைஸ் டாட் காம்; மழலைஸ் டாட் காம் ஒரு ரோஜாப்பூ, மணம் வீசும் ஒரு மழலைப்பூ; ஒவ்வொரு இதழும் தனிப் பெருமை, ஆகிராவின் முயற்சி ஒரு அருமை; எங்கு திரும்பினும் சித்திரங்கள், போட்டிகள் நிரம்பிய பக்கங்கள்; இணையப் பாட்டியின் கவிதைகள், கதைகளில் படிக்கும் நீதிகள்; பெரியவர் அசலமின் கீதையாம், நல்வழி காட்டும் பாதையாம்; சுகந்தியின் சிறந்த அம்சங்கள், மழலையின் மின்னும் அங்கங்கள்; குழந்தைகளின் அழகு சித்திரங்கள், நம்மை வியக்க வைக்கும் பாத்திரங்கள்; குழந்தைகளிடம் இவ்வளவு சக்தியா? மழலைகளில் இத்தனை மேதையா? மனதுக்கும் இன்பம், மூளைக்கும் வேலை; ஓடிவரும் குழந்தை, கணினி முன் மாலை; விஷியின் கனவு நனவானது, ஆகிராவின் தலைமையில் உருவானது; யாவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இதழ், மேலே ஓங்கி வளரட்டும் புகழ்; கடவுளின் அருளும் கிடைக்கட்டும், பெரியவர்கள் ஆசியில் சிறக்கட்டும்! அன்புடன் அம்மம்மா விசாலம்
|
Your Feedback for this Song |