Google
 
Web www.mazalais.com

Enable unicode to view Tamil contents

தியாகபிரம்மம்

இணையப் பாட்டி

image: saint Tyagaraja, the principal member of the Trinity of Carnatic Music

சங்கீத மும்மூர்த்திகள்

அன்புக் குழந்தைகளே,

கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகள் ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர், ஸ்ரீ ஸ்யாமா சாஸ்த்திரி ஆவர். இதில் ஸ்ரீ தியாகராஜ ஆராதனை பகுள பஞ்சமி அன்று திருவையாற்றில் அவரது பிருந்தாவனத்தில் மிகச் சிறப்பாக நடக்கும். அன்றைய தினம் பெரிய சங்கீத மேதைகள் அவர் இயற்றிய பஞ்ச ரத்ன கீர்த்தனங்களைப் பாடுவார்கள். அப்போது அவரது திரு உருவச் சிலைக்கும் அபிஷேகம், அராதனை, பூஜைகள் முதலியவை நடக்கும்.

தியாகராஜர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்:

தியாகராஜர் தன் ஐந்தாவது வயதிலிருந்தே ஸ்ரீ ராமநாமத்தை ஜபிக்க ஆரம்பித்தார் சுமார் 95 கோடிகள் ஜபித்திருக்கிறார். ஒரு சமயம் அவ்ர் திருப்பதி கோவிலுக்குப் போய்த் திரும்பி வந்து கொண்டிருந்தார் அப்போது ஒரு இடத்தில் ஒரே கூட்டம். என்னவென்று விசாரித்ததில் ஒருவன் கிணற்றில் விழுந்து இறந்து விட்டான் என்று தெரிய வந்தது. இறந்தவன் ஒரு பிராமணன். அவன் தன் மனைவி, குழந்தையுடன் அங்கிருக்கும் ஒரு கோவிலுக்குப் போனான். இருட்டிவிட்டதால் ஒரு ஆலயத்திற்குள் சென்று இரவைக் கழித்துவிட்டுச் செல்ல நினைத்தான். ஆனால் அந்தக் கோவில் உள்ளே தாழிடப்பட்டிருந்தது. என்ன செயவது என்று தெரியாமல் அங்கிருக்கும் மதில் மேல் ஏறி உள்ளே குதித்து, பின் உள்ளே இருக்கும் தாழ்ப்பாளைத் திறக்கலாம் என்று எண்ணி உள்ளே குதித்தான்; அவ்வளவுதான் டம் என்ற சத்தத்துடன் கிணற்றில் விழுந்து விட்டவன் நீரில் மூழ்கித் தத்தளித்து செத்துப்போனன். அவள் மனைவி வாசலில் தன் கணவன் இவ்வளவு நாழியகியும் வெளியில் வரவில்லையெ என்று கவலையுடன் அழுது ஊரைக் கூட்டினாள். எல்லொரும் கோவில் உள்ளே தேடி, பின் அவனைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்கள்.

அப்பிராமணன் கழுத்தில் துளசி மாலை இருந்தது. அவன் சிறந்த விஷ்ணு பகதன் என்று தியாகராஜ ஸ்வாமிக்குத் தெரிந்து, அதன் பின் "நா ஜீவோ தாரா" என்று தெலுங்கில் அந்த மனிதனின் உயிரைத் தந்துவிடு ராமா என்ற பொருள்படும் ஒரு பாட்டை உள்ளம் உருகிப் பாடினார். என்னே அதிசயம்! அந்த உயிர் போன மனிதன் உறங்கி எழுந்தவன் போல உயிர் பெற்று நின்றான். என்னே பக்தி! என்னே ராம நாமத்தின் மகிமை!

இப்போது புரிகிறதா, "ராம நாமம்" ஒரு சிறந்த மந்திரம் என்று. இதை எப்போதும் ஜபிக்கலாம் படுக்கையிலும் ஜபிக்கலாம் அதன் சக்தியே தனி.

வாருங்கள் நாமும் ராம நாமம் சொல்லலாமே,

ராம நாமமு ஜென்ம ரக்ஷக மந்த்ரம்

அன்புடன் அம்மம்மா விசாலம்

இணையப் பாட்டி பக்கம்

Your Feedback for this Story

Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazalais.com newsletter?Yes
No

* Required