![]() |
![]() |
|
நம் இயக்கத்தின் அடிப்படை:ஆசா பாச பந்தம்: நாம் பிறக்கும் பொழுது நமக்கு ஒன்றுமே தெரியாது. ஆசை, சொந்தம், பந்தம் எல்லாம் எப்படி நம்மை வந்து ஆட்கொள்கின்றன? பிறந்ததும் உலகைப் பார்க்கும் பொழுது ஒன்றும் விளங்குவதில்லை. முதல் குருவாகிய அன்னை நமக்கு ஒவ்வொன்றாகk காண்பித்து, இது இன்னது அல்லது இது இன்னவர் எனக்கூறி நமக்கு அறிவைப் புகட்டுகிறாள். நாமும் அன்னையின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து அதை ஏற்றுக்கொள்கிறோம். இப்படிக் கொஞம் கொஞ்சமாக விஷயங்களைப் புரிந்து கொள்கிறோம். உண்வுப் பொருட்களைக் காண்பித்து அதன் பெயரைச் சொல்லி ஊட்டுகிறாள். உண்ணும்பொழுது அதன் ருசித் தன்மை ஓரு முதல் அனுபவமாக (First Experience) நம்மை ஒட்டிக்கொள்கிறது. இது நம் சித்தத்தில் பதிவாகி மறுமுறை அதே அனுபவம் வரும்போது அதை அறிய உதவுகிறது. இப்படி ஒரு தரம் அனுபவமாகிய வஸ்துவில் நமக்கு விருப்பு அல்லது வெறுப்பு ஏற்படுகிறது. நல்ல சுகமான அனுபவமானால் விருப்பும், சங்கடகரமான அனுபவமானால் வெறுப்பும் ஏற்படுகிறதது. இப்படி 5 ஞானேந்திரியங்கள் வழி வரும் விஷயங்களை (ஒலி, ஒளி, வாசனை, ருசி, உணர்வு (கிரஹித்து அவைகளின் அனுபவங்களை ஒட்டி நம் விருப்பு வெறூப்புக்கள் பிறக்கின்றன. நல்ல அனுபவத்தில் நம் நாட்டம் செல்லும், அதை மறு முறை அனுபவிக்க ஆவல் எழும். இதுவே ஆசையாகப் பரிணமித்து நம்மை மேலும் அந்த அனுபவத்தை அடைய ஓர் தூண்டுகோலாக அமையும். விஷயங்களில் வரும் இந்த ஆசை நம்மை நாளடைவில் விஷயாஸ்பத்தியில் மூழ்கடிக்க வைக்கிறது. அதேபோல் நம் அன்னை ஒருவரைக் காண்பித்து இது உன் தந்தை, இது உன் தம்பி, இது உன் தாத்தா, இது உன் மாமா என்று கூறி நமக்கு அவர்களிடமுள்ள உறவை அறிவிக்கிறாள். அன்னையும் மற்றவர்க்களூம் நம்மிடம் காட்டும் பரிவையும் அன்பையும் ஏற்று அதற்கு ஈடாக அவர்பால் பாசத்தை வளர்த்துக்கொள்கிறோம். இப்படி நாளடைவில் நம்முள் “பாசம்” என்ற மற்றொரு அனுபவம் (experience) உதயமாகிற.து. நம் உறவினரிடம் நாம் வைக்கும் அன்பும் அவர்கள் நம்மிடம் காட்டும் பரிவும் “பாசமாக” மாறி நம்மைத் தொற்றிக்கொள்கிறது. இப்படி, புதிய அசைகளும் பாசமும் வளர்கின்றன. அஹம் என்ற மூல விசாரமாகிய இயக்குனர் இந்த ஆசாபபாச அனுபவங்களை என்னுடையது என சொந்தம் கொண்டாடி, பற்றுதலில் மூழ்கிவிடுகிறார். எப்படி எட்டுக்கால் பூச்சி தன்னிலிருந்து வரும் ஒரு மெழுகினால் தன்னைச்சுற்றி ஒரு வலை (கூடு) கட்டி அதனுள் தன்னை பந்தனம் சைய்துகொள்கிறதோ அதேபோல் இந்த “அஹம்” என்ற உணர்வு ஆசாபாசமெனும் மெழுகினால் பந்தம் (attachment) என்ற வலையை (கூட்டை) நம்மைச்சுற்றி உருவாக்கி அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறோம். இதை மாய வலை எனப் பெரியோர்கள் சொல்கிறார்கள். ஏனென்றால் இது நாமே உருவாக்கிய ஒரு பந்தனம். இது ஒரு மடமை, அறிவீனம். இதேபோல் 5 ஞானேந்திரங்கள் வழி வரும் விஷயங்களில் ஆசை வைத்து, உறவுகளில் பாசம் காட்டி அதிலுள்ள அனுபவங்க்ளை நம்முடையது எனச் சொந்தம் கொண்டாடி அதன்மூலம் எழும் சுகதுக்கங்களாகிய பந்தத்தில் கடடுண்டு ஸம்ஸாரமெனும் பெரும் கடலில் தத்தளிக்கிறொம். விசார எழுச்சி இனி விசாரங்கள் எப்படி உண்டாகின்றன எனப் பார்ப்போம். ஆசாபாசத்தினால் கட்டுண்டு பல காரியங்களைச் செய்கிறோம். எதற்காகச் செய்கிறோம்? ஒரு பலனை எதிர்பார்த்துச் சைய்கிறோம் இல்லையா? அப்படிப் பலனை எதிர்பார்த்து அந்தப் பலன் கிடைக்கவில்லையானால் நமக்கு ஏமாற்ற்ம உண்டாகிறாது. நினைத்த பலன் கிடைத்துவிட்டால் சந்தோஷம் உண்டாகிறது. ஆனால் பலன் என்ன வரும் என்று முன்கூட்டியே தெரிவதில்லை. ஆகையால் நமக்கு அக்காரியம் துவங்குமுன் ஒரு பயம், அல்லது சந்தேஹம் அல்லது கவலை வருகிறது. இது தான் விசாரம். பசி, வலி, கவலை, சந்தோஷம், சங்கடம், பயம், சந்தேஹம் எனப் பல விசாரங்கள் நம்முள் வந்து போய்க்கொண்டிருக்கின்றன. இந்த விசாரங்களின் அடிப்படை என்ன? ஆசாபாசம். அதன் விளைவுதான் நம்மைக் காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாத்ஸர்யாதி ஆறு துர்குணங்களில் மூழ்கடிக்க வைக்கிறது. எப்படி? காமம் = Desire, க்ரோதம் = Anger, லோபம் = Miserliness, மோஹம் = Attachment, மதம் = Egoism, மாத்ஸர்யம் = Fighting. ஒரு பொருளை அடைய இச்சை கொள்வது காமம் (ஆசை) எனப்படுவது. அது கிடைக்கவில்லையேல் க்ரோதம் (சினம்) வருகிறது. அது கடைத்துவிட்டால் அதை மற்றவர்களுக்குத் தராமல் தாமே வைத்துக்கொள்வது லோபம் (கருமித்தனம்). ஒரு பொருளில் நாம் வைக்கும் ஆசை மோஹம் (ஈடுபாடு). இது என்னுடையது என்று ஒரு பொருளில் வைக்கும் உடமை மதம்.(அஹ்ங்காரம்). அந்தப் பொருளைக் காப்பாற்ற நாம் எடுக்கும் முயற் தான் மாத்ஸர்யம் (பொருதல்). இந்த குணங்கள் எழ மூல காரணம் என்ன? “அஹம்” என்ற உணர்வுதான் முதல் விசாரம் என முன்பு பார்த்தோம். இந்த அஹம் நம் உடலை (BMI) உடமை கொண்டு உலக விஷயங்களில் ஈடுபட்டு ஆசாபாச பந்தத்தால் கட்டுண்டு மேற்கூறிய குணங்களின் தாக்குதலினால் அவதிப்படுவதால் உண்டாகும் பலன் தான் விசாரம் (Thought). அஹம் என்ற உணர்வு வேண்டியதுதான். ஆனால், ஆசாபாச பந்தம் தவிர்க்கப்பட வேண்டியது. விசாரமில்லாமல் இருப்பதற்கு இதுவே சிறந்த வழி. நம் பலவாறான இயக்கம்: நாம் பல பொழுது பலவாறாக இயங்குவது எதனால்? மேலே குரிப்பிட்ட 6 குணங்களூக்கு மூல காரணமாக நம்முள் மூன்று அடிப்படையான குணங்கள் உள்ளன. அவை: ஸ்தவ, ரஜஸ், தமஸ் என்பனவாகும். ஸத்வ குணம் சாந்தமாகவும், அமைதியாகவும், நிதானமாகவும் விளைவுகளை சிந்தித்து அதற்கேற்ப செயல் புரியும் தன்மையைக் குறிக்கிறது. ரஜோ குணம் மனப்போக்கில், விளைவை ஆராயாமல், உடனடியாகக் கண்மூடித்தனமாகச் செயல் புரியும் தன்மையுடயது. தமோ குணமானது சோம்பலாக, மடமையாகச் செயல்படும் தனமையைக் காண்பிக்கிறது. ஸத்வகுணம் நல்ல காரியங்களில் ஈடுபடுவது, நல்ல விசாரங்களில் மனதைச் செலுத்துவது, நற்பணிகளில் செயல்புரிவது, மற்றவர்க்கு உதவி புரிவது, எல்லோர் நலனையும் நாடுவது, ஆற அமர சிந்தனை புரிந்து செயல் படுவது, சாந்த சுபாவத்துடன் பணிபுரிவது, தன்னலமற்ற காரியங்களைச் செய்வது போன்ற குணம் கொண்டது. ரஜோ குணமுடையவர்கள் தன்னலம் மட்டும் நாடுபவர்களாகவும், மற்றவர்க்குத் தீங்கு நினைப்பவராகவும், விளைவுகளைச் சிந்திக்காமல் செயல்படுபவராகவும், சினம் கொண்டவராகவும், அனீதி மனப்பன்மை உடையவர்களாகவும் தோற்றமளிப்பார்கள். தமோகுணம் ஒருவரை மந்த புத்தி படைந்தவராகவும், பணிபுரிவதில் உற்சாஹம் அற்றவர்களாகவும், ஆசாபாசங்களை சரிவரப் புரிந்துகொள்ளாதவர்களாகவும், அமைதியில்லாதவர்களாகவும் ஆக்கிவிடும். இந்த மூன்று குணங்களும் நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் அடிப்படடையாக உள்ளன. சில சமயம் ஸத்வகுணவானாகவும் மற்ற சமயம் ரஜோ குணத்துடனும், வேறு சில சமயம் தமோ குணவானாகவும் நாம் செயல் புரிகின்றோம். காரணம் நம் அப்பொழுதைய் மனோநிலைதான். நம் மனமாற்றம் நம்முள் உள்ள அப்பொழுதைய விசாரத்தின் தன்மையை ஒட்டியுள்ளது. ஆகையால்தான் நாம் ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு விதமாகச் செயல் புரிகிறோம், தோற்றமளிக்கிறோம். புரிந்ததா? வாழ்க்கை வளமுடன் வாழ்வது எங்ஙனம், எப்படி நம் இயக்கத்தை ஒழுங்கு படுத்துவது, நம் வேத சாஸ்த்திர நியதி என்ன, வாழ்க்கைக்கு அவை எவ்வளவு முக்கியம் முதலிய விஷயங்களைப் பின்னால் வரும் தொடர்களில் ஆராய்வோம் (தொடரும்) : ஹரி ஓம் :என்ற மின்னஞ்சலில் வரும் வினாக்களுக்கு நேரடியாக உங்களுக்கு பதில் தரப்படும். Website: www.geocities.com/v_achalam
Your Feedback for this article |