Google
 
Web www.mazalais.com
Enable unicode to view Tamil contents

வாழும் முறைமை

அசலம்

மின்னஞ்சல்:

achalam38@gmail.com
achalam38@aim.com
achalam38@netscape.net

மின்தளம்:

www.geocities.com/v_achalam

இங்கிருந்து எமது மற்ற:
“bhajanasampradaayam”
“aatmeekam,”. and “Webview”
மின்தளங்களூக்குப் போகலாம்

ஓம்

அருள் வாக்கு

Date: 11/02/2007
கடிதம்
From
அசலம்

அருமைச் செல்வங்களே,

எவ்வளவு பேர்கள் நாம் முன் மடலில் சொன்னதுபோல் சைய்து பார்த்தீர்கள்? பலனில்லயேல் தொடர்ந்து சைய்து வாருங்கள். நாளடைவில் பலன் உண்டாகும்.

காலையில் இப்படி நல்ல பொழுது மலர, கைகள் தரிசனம் முடிந்து, சிறிது வ்யாயாமம் அதாவது உடற்பயிற்சி (உங்கள் பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொண்டபடி) செய்யவும். பிறகு நித்திய கர்மாக்களை முடித்துக்கொண்டு, ஸ்னானம் செய்து, திருநீரும், குங்குமமும் நெற்றியில் தரித்து, கடவுள் படங்களுக்கு முன் அமர்ந்து இறை வணக்கம் செய்யவும். உங்களுக்குத் தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லலாம். தெரியாதவர்கள், கீழே தந்துள்ள ஸ்லோகங்களைச் சொல்லலாம்: கால்களை மடித்து, இடதுகால் கணுவில் வலதுகால் கணு அமர, கைகளைக் கோர்த்து மடியில் வைத்து, கண்களை மூடிக்கொண்டு, உங்கள் இஷ்ட தெய்வத்தின் உருவை மந்தில் நிலை நிருத்தி, மற்று விஷயங்கள் விசாரமாக வராமல் பகவான் பேரில் சிந்தனையை நாட்டி, கீழ்க்கண்ட ஸ்ளொகங்களைச் சொல்லவும்.

விநாயகன்

விக்னேஸ்வர மஹாபாஹா கோடிஸூர்ய ஸமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவா ஸர்வ கார்யேஷு ஸர்வதா

கணபதி பகவானுக்கு விக்னேஸ்வரன் என்ற ஒரு பேர் உண்டு. எல்லா விக்னங்களையும் அகற்றக்கூடியவர் என்று பொருள். விக்னங்களுக்கு ஈஸ்வரனாகத் திகழுபவர் கணபதி. ஆகையால்தான் விக்னங்கள் (தடைகள்) அகல வேண்டுமானால் அவர் ஒருவராலே தான் முடியும். கோடி சூரியர்களுடைய பிரகாசத்தைக் கொண்டவராகிய ஹே தேவா! (நான் செய்யும்) எல்லாக் காரியங்களும் எப்பொழுதும் தடையில்லாமல் ஸபலமாக நிகழ வேண்டும். நம் சாஸ்திரப்படி எந்த லௌகீக காரியமானாலும் சரி, தெய்வீகக் காரியமானாலும் சரி, முதலில் விக்னேஸ்வரன் அருள் கோருவது வழக்கம். தினம் நாம் செய்யும் காரியங்களில் தடையில்லாமல் நமக்கு உதவி புரிய விக்னேஸ்வரரை பிரார்த்திப்பது தகும். கணபதி ஞானத்திற்கு அதிபதி. ஆகையால் நம் படிப்பிற்கு உதவியாக இருந்து நம்மை நன்றாகப் படிக்க வைக்க கனபதியை வணங்குவது உசிதம்.

ஸரஸ்வதி

யாகுன்தேந்து துஷாரஹார தவளா யாசுப்ர வஸ்த்ராவ்ருதா
யாவீணா வரதண்ட மண்டித கரா யாஸ்வேத பத்மாஸனா
யாப்ரஹ்ம்மாச்சுத சங்கர ப்ரபிர்திபி தேவை:ஸதா பூஜிதா
ஸாமாம்பாது ஸரஸ்வதி பகவதி நிச்சேஷ் ஜாட்யாபஹார

நாம் செய்யப்போகும் காரியங்களின் நுட்பங்களை அறியவும், எப்படிச் சரிவர செய்ய வேண்டும் என்றும் நமக்கு வழிகாட்ட வித்தையின் நாயகியாகிய ஸரஸ்வதி தேவியை வணங்கி அவள் அருள் பெற வேண்டும். எல்லாக் காரியங்கள் செய்யவும் ஒரு அறிவு தேவை. அறிவிற்கிருப்பிடமாகிய ஸரஸ்வதியை வணங்குவது மிக அவசியம். பலவித மாலைகள் கழுத்தை அலங்கரிக்க, வெள்ளை வஸ்திரம் தரித்து, கையில் வீணையை வைத்து வெள்ளைத் தாமரையில் பத்மாஸனம்போட்டு அமர்ந்து, பிரஹ்மமா, விஷ்ணு, மஹேஸ்வரன் முதலிய தேவர்களால் பூஜிக்கப்படுபவளாகிய ஹே ஸரஸ்வதி வணக்க்ம்.

குரு

குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவ ரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தயே நம:

பிறகு குருவை வணங்குவது வழக்க்ம். ஏன்? நமக்கு வித்தை கற்றுத்தருபவர் குரு. நம்முள் உள்ள அஞ்ஞானம் எனும் இருளை நீக்கி ஞானம் எனும் ஒளியைத் தருபவர் குரு. எல்லோருக்கும் லோக குருவாக, முதல் குருவாகத் திகழ்பவர் ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி. எல்லா லோகங்களிலும் லயித்திருப்பவரும், எல்லோர்க்கும் ஸுகத்தை அருளுபவரும், எல்லா வித்தைகளும் கற்றவரும் ஆகிய ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தே உமக்கு நமஸ்காரம்.

சிவன்

சிவம் சிவகரம் சாந்தம் சிவாத்மானம் சிவோத்தமம்
சிவமார்க ப்ரணேதாரம் ப்ரணதோஸ்மி ஸதா சிவம்

சிவம் என்றால் உயிர் எனப் பொருள். எல்லா ஜீவராசிகளுக்கும் உயிராகவும், சாந்த மூர்த்தியாகவும், நம்முள் உயிராகத் திகழும் ஆத்மாவாகவும், எல்லோருக்கும் வழிகாட்டியாக இருப்பவரும் ஆகிய சிவபெருமானுக்கு நான் எப்பொழுதும் ந்மஸ்கரிக்கிறேன். சிவன் உலகபிதா என அறியப்படுபவர். அவர் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருபவர். அதாவது உடலில் ஒரு பாதி புருஷனாகவும் மறு பாதி ஸ்த்ரீயாகவும் தோற்றமளிப்பவர். அதாவது அவரே உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் மாதா பிதா எனப் பொருள். அப்படிப்பட்ட தெய்வத்தை நாம் தினம் நமஸ்கரிப்பது உசிதம்.

அம்பாள்

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரயம்பிகே கௌரி நாராயணீ நமோஸ்துதே

எல்லா மங்களங்களையும் தருபவளும், சிவ பத்தினியாக ஸர்வ போகங்களையுm தருபவளும், துர்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி என்ற மூன்று தேவிகளுக்கும் நாயகியும், ஸ்ரீ நாராயண பகவானின் சகோதரியுமான ஹே அம்பிகே, உனக்கு எனது நமஸ்க்காரம். அம்பாள் மூன்று தேவிகளின் இருப்பிடம். அவளிலிருந்துதான் லக்ஷ்மி, ஸரஸ்வதி, பார்வதி என்ற தேவிகள் ஆவதரித்தார்கள். அம்பாள் உலகிற்கு தாயாக அருள் புரிபவள். ஆதலால் தாயை வணங்குவது நம் நித்திய காரியங்களில் ஒன்றாகும்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என நமக்கு நம் வாழ்வில் வழிகாட்டிகளாகவும், நமக்கு நல்லதைச் செய்பவர்களுமாகிய இந்த ஐவர் முக்கிய இடம் பெறுகிறார்கள். ஞானத்திற்கு அதிபதியும் விக்னங்களை அகற்றுபவரும் ஆகிய வினாயகனையும், வித்தைக்கு நாயகியாகிய ஸரஸ்வதியையும், ஞானத்திற்கு வழிகாட்டியாகிய குருவையும், மாதா, பிதா என அறியப்படும் சிவன் அம்பாள் இவர்களையும் தினமும் வண்ங்குவது மிக அவசியம்.

பிறகு நமக்கு உயிரளித்த நம்முடைய ப்ரத்யக்ஷ மாதா பிதாக்களையும் நமஸ்கரிக்க வேண்டும். இப்படி தினம் செய்தால் குழந்தைகளாகிய உங்களுக்கு நல்ல ஸுக வாழ்வும், படிப்பும், நற்குணங்களும் கைவரும். குழந்தைகளே, இன்று முதல் மேல்சொல்லப்பட்ட நித்திய காரியங்களை முதலில் செய்வீர்களாக.

எல்ளோரும் நலமுடன் வாழ ஈசன் அருளல் வேண்டும்.

அன்புடன்
உங்கள் அசலம்