Google
 
Web www.mazalais.com

Enable unicode to view Tamil contents

பூவின் பெருமை!

பாடல்

தளதளவென ஒரு செடி தளிர்விடும் மலர்ச்செடி

வண்ண வண்ண பூக்களை வழங்கிடும் மலர்ச்செடி

சின்னப்பாப்பா சிகையிலே சின்ன முல்லை சிரிக்குதே

அன்புத் தங்கை தலையிலே அழகுரோஜா மணக்குதே

மல்லிகாவின் மலையிலே மல்லிகைப்பூ மலருதே

தண்ணீர்த் தடாகத்திலே தாமரைப்பூ தளிர்க்குதே

சாலையோரப் பூங்காவிலே சாமந்திப்பூ பூக்குதே

[தளதளவென...]

நல்ல பல பூக்களை நாளும் எங்கும் காணலாம்

வண்ணப் பூக்கள் காட்சியில் வானவில்லை காணலாம்

மணமளிக்கும் மலர்களே மகிழ்வளிக்கும் மனதிற்கும்

இறைவனுக்குச் சூட்டவே,

மணமக்கள் கழுத்திலே,

மறைந்தவர்கள் படத்திலே -

மாலையாகப் பூக்களே...

சிறந்த இடம் வகிக்குமே!

[தளதளவென...]

- வெற்றிவளவன்.
-oOo-

தமிழ்க்கவிதைகள் பட்டியல்

Your Feedback for this poem

Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazalais.com newsletter?Yes
No

* Required