Google
 
Web www.mazalais.com

Enable unicode to view Tamil contents

தமிழ்!

வெற்றிவளவன்

Artist: S. Dinesh
தமிழர் தம் தாய் மொழி; தரணி புகழ் தமிழ் மொழி!

செந்தமிழ் நாட்டுச் சீலமொழி; செழிப்புடனே வளர்ந்த மொழி!

பாண்டிய நாட்டின் தலை மொழி; சங்கம் வைத்துத் தழைத்த மொழி!

புலவர் பலரைத் தந்த மொழி; புரவலர் கேட்டுப் புகழ்ந்த மொழி!

பாரதியாரின் பாட்டு மொழி; பாரத விடுதலை கீத மொழி!

வள்ளுவரால் சிறந்த மொழி; திருக்குறளும் பிறந்த மொழி!

பஞ்ச காப்பியம் வந்த மொழி; அணியாய் அவற்றை அணிந்த மொழி!

அகிலம் போற்றும் அன்பு மொழி; ஆன்றோர் புகழும் அறிவு மொழி!

எல்லாப் புகழும் பெற்ற மொழி; என்றும் வாழும் இனிய மொழி!

உலகுக் கெல்லாம் உயர் மொழி; தமிழே எங்கள் உயிர் மொழி!

- வெற்றிவளவன்
-oOo-

தமிழ்க்கவிதைகள் பட்டியல்

Your Feedback for this Poem

Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazalais.com newsletter?Yes
No

* Required