Google
 
Web www.mazalais.com

Enable unicode to view Tamil contents

ஒரு கவிஞனின் பொங்கல் விருந்து

வெற்றிவளவன்

சீர்மொழிகள்

அன்புள்ள மாந்தரே!
அறிவுள்ள சிறுவரே
இச்சிறு மொழிகள்
இவற்றைக் கேளீர்

நாட்டினைக் காக்க
நல்லன செய்க
பரிவுடன் நடந்து
பண்பினைக் காட்டுக

பண்புடன் வாழ்ந்து
பாராட்டுப் பெறு
உண்மையே உரைத்து
உலகினில் உயர்...!

image Mahatma Gandhi with Subhash Chandra Bose
image: Christmas Tree Cluster

விண்மீன்கள்

கண்ணைச் சிமிட்டும் விண்மீன்கள்
பொன்னைப் போன்ற ஒளிவண்ணம்

விண்ணில் சிரிக்கும் முல்லைகள்
விழுந்து விட்டால் விண்கற்கள்

இரவில் மலரும் விண்மலர்கள்
பகலில் மறைந்தே போய்விடும்

எண்ணி விட எண்ணிடின்
கண்ணா மூச்சி ஆடிடும்

மின்மினி போன்றே ஒளிதரும்
கண்ணின் மணிகள் விண்மீன்கள்

வானவில்

வண்ணங்கள் ஏழு
வானவில்லில் உண்டு
மழைக்கால மாலை
மணிவானில் தோன்றும்
தொடுவானில் துவங்கி
நடுவானில் நிற்கும்
கதிரவனின் எதிர்திசையில்
கவின்காட்சி அளிக்கும்
கண்களில் காட்சி
இயற்கையின் ஆட்சி
image: Rainbow
image: Lightning sequence

மின்னல்

மின்னல்....

பூவுலகப் புதுமைகளை,
படமெடுக்கும்
பரமனின்
கார்மேகக் காமிராவின்
'ஃபிளாஷ்' ஒளி

- வெற்றிவளவன்
-oOo-

தமிழ்க்கவிதைகள் பட்டியல்

Your Feedback for these Poems

Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazalais.com newsletter?Yes
No

* Required