Google
 
Web www.mazalais.com

Enable unicode to view Tamil contents

கவியருவி - வழிகாட்டி

வெற்றிவளவன்

image - courtesy: http://www.freefoto.com

ஆக்கமும் அழிவும்

ஆக்கங்கள்:

அன்பே செய்தல் அருமை ஆகும்
அறமே செய்தல் அறிவே யாகும்

நல்லன செய்தல் நலமே ஆகும்
வல்லன செய்தல் வலிமை ஆகும்

நன்மை செய்தல் நன்றே ஆகும்
பாசம் செய்தல் நேசம் ஆகும்

பரிவே செய்தல் பண்பே யாகும்
பணிவே செய்தல் பலமே யாகும்

ஆக்கம் செய்தல் ஊக்கம் ஆகும்
வளமே செய்தல் வரமே யாகும்

-oOo-

அழிவுகள்

அடாது செய்தல் கூடாத தாகும்
தீதே செய்தல் தீமை யாகும்

குழப்பம் செய்தல் குற்றம் ஆகும்
குறும்பே செய்தல் குறையே யாகும்

மோசம் செய்தல் நாசம் ஆகும்
வஞ்சம் செய்தல் நஞ்சே யாகும்

சிறுமை செய்தல் வறுமை ஆகும்
அதர்ம்ம் செய்தல் அழிவே யாகும்

-oOo-

sketch by S. Manikandan
sketch by Menaka

இறைவன்

உலகைப் படைத்து
உன்னைக் காத்து
உண்மை உணர்த்தி
உருவை மறைத்து
உதவிகள் செய்யும்
பயன்கருதா பண்பாளன்
-இறைவன்....

-oOo-

பாடநூல்

பாடநூல் அது
பயன் தருநூல்
அன்பைப் பெருக்கி
அறிவைக் கூட்டி
தீமை கழித்து
திட்டம் வகுக்கும்
கடமை உணர்த்தி
கருத்தும் உரைக்கும்
பயனுள்ள துணை
-பாடநூல்

-oOo-

Image: Book

தமிழ்க்கவிதைகள் பட்டியல்

Your Feedback for these Poems

Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazalais.com newsletter?

* Required