Google
 
Web www.mazalais.com

Enable unicode to view Tamil contents

கவியருவி - ஞானம்

வெற்றிவளவன்

image - Photograph of Toys depicting the soceity

ஓ...மானிடனே!

அன்பினாலே பிணைந்திருந்தோம்
இன்பமாய் வாழ்ந்திருந்தோம்

இதயங்கள் பிரித்திடவே
இனவெறியும் இங்குவர
பிரித்தாளும் சூழ்ச்சியினை
யாருனக்குக் கற்பித்தார்?

சாதிகள் இல்லையென்று
சாதிக்க வேண்டியிருக்க
சாதிப் பெயராலே
சண்டைகள் இடுவதென்ன?

மானிடரை உயர்த்திடவே
மாதவங்கள் காத்திருக்க
சாதியினை உயர்த்திடவே
சாவதென்ன மானிடனே?

பிறப்பாலும் இனபேதம் ஏதுமில்லை
உன் உடலாலும் சாதியினை அறிவதில்லை

ரத்தத்தின் நிறமெல்லாம் சிவப்பேதான்
உன் உள்ளத்தில் மட்டுமேனோ
இனக் கறுப்பு...

      -oOo-

வெள்ளம்

தாகத்தில் தவித்து நாங்கள்
துயரத்தில் அழைத்த வேளை
தயவின்றித் தொலைந்தாய் நீ

எங்கள் பொன்விளையும் பூமியெல்லாம்
பொல்லாத பாலையாகி
பயனற்றுப் போனபின்னே

அந்தப்
பாலைநிலத்துப்
பேரீச்ச மரம்கூட
பலன்தராதிருக்கவோ?

சீற்றத்துடன்
இன்று நீ
சீறிப் பாய்கின்றாய்...

            -oOo-

Desert - Image courtesy: Answers.com
Rainbow - Image courtesy: answers.com

இயற்கை

ஊதாப்பூ
கார்நீலம்
நீலக்கடல்
பச்சை மரம்
மஞ்சள் நிலா
ஆரஞ்சுப் பழம்
செவ்வானம்
வண்ணங்களால் ஆனது வானவில்
வண்ணங்களால் ஆனது உலகம்
இயற்கை அது ஒரு வானவில்
வாழ்க்கை அதில் ஒரு வானவில்

                  -oOo-

தமிழ்க்கவிதைகள் பட்டியல்

Your Feedback for these Poems