Google
 
Web www.mazalais.com

Enable unicode to view Tamil contents

கந்தர் சஷ்டி கவசம்

துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம் - நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசந் தனை

அமரரிடர் தீர வமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

சஷ்டியை நோக்கச் சரஹணபவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி ஆட

மைய நடஞ்செயும் மயில் வாகனனார்
கையில் வேலாலெனைக் காக்கவென்றுவந்து
வரவர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா வெண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீரிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரஹணபவனார் சடுதியில் வருக

ரஹணபவச ரரரரரரர ரிஹணபவச ரிரிரிரிரிரிரி
விணபவசரஹ வீரா நமோ நம நிபவசரஹண நிறநிறநிறென
வசரஹணப வருக வருக அசுரர் குடி கெடுத்த ஐயா வருக
என்னையாளும் இளையோன் கையில் பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக

ஐயுங்கிலியும் அடைவுடன் சவ்வும் உய்யொளி சவ்வும் உயிரையுங்கிலியும்
கிலியுஞ்சவ்வும் கிளரொளியையும் நிலைபெற்றென் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன்றீயும் தனியொளியொவ்வும் குண்டலியாஞ்சிவ குகன் தினம் வருக

ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீரிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செய்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழகுடைய திருவயிருந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்னம் பதித்த நற்சீராவும்
இரு தொடையழகும் இணை முழந்தாளும் திருவடியதனில் சிலம்பொலி முழங்க

செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொக மொகென
நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகென
ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டிங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து

என்றனையாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்
லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதனென்று

உன் திருவடியை உறுதியென்றெண்ணும் என்றலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க்குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க விதி செவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திரு பல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனிய வேல் காக்க
மாய்பை இரத்தின வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவேலிரு தோள் வளம்பெறக் காக்க பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதினாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுற செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

ஐவிரலடியிணை அருள்வேல் காக்க கைகளிரண்டும் கருணைவேல் காக்க
முன்கையிரண்டும் முரண்வேல் காக்க பின்கையிரண்டும் பின்னவளிருக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணையாக நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பா நாடியை முனைவேல் காக்க எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க

அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகறன்னில் வஜ்ரவேல் காக்க அரையிருடன்னில் அனையவேல் காக்க
ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமத நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க

தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும் பகையகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகடின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குரளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம்மராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லினுமிருட்டிலும் எதிர்படுமன்னரும் கனபூசை கொள்ளும் காளியொடனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் சண்டியக் காரரும் சண்டாளர்களும்
என் பெயர் சொலவும் இடி விழுந்தோடிட

ஆனையடினிலரும் பாவைகளும் பூனை மயிறும் பிள்ளைகளென்பும்
நகமும் மயிறும் நீண்முடி மண்டையும் பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும் ஓதுமஞ்சனமும் ஒரு வழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றான் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோட படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடனங்கம் கதறிடக் கட்டு கட்டு கட்டு கை கால் முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதிற்செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடிவேலால் பற்று பற்று பகலவன் தணலெறீஇ
தணலெறி தணலெறி தனலதுவாக விடுவிடு வேலை வெறுண்டதுவோடப்

புலியும் நரிவயப் போத்தொடு நாயும் எலியுங் கரடியும் இனித் தொடாதோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடனிறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒரு தலை நோயும்
வாதஞ் சயித்யம் வலிப்புப் பித்தம் சூலை சயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல் விப்பிருதி பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்தரணை பருவரையாப்பும்

எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாதோட நீயெனக்கருள்வாய்
ஈரேழுலகமும் எனக்குறவாக ஆணும் பெண்ணும் அனைவருமெனக்காம்
மண்ணாளரசரும் மகிழ்ந்துறவாகவும் உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரஹணபவனே சயிலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொளி பவனே அரிதிரு மருகா அமராவதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிரை விடுத்தாய் கந்தா குகனே கதிர் வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை யழித்த இனிய வேல் முருகா
தணிகாசலனே சங்கரன் புதல்வா கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா

பழனிப் பதிவாழ் பாலகுமரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தில்மா மலையுறும் செங்கல்வராயா சமராபுரி வாழ் சண்முகத்தரசே
காதார் குழலாள் கலைமகள் நன்றாய் என் நாவிருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை நேசமுடன் யான் நெற்றியிலணிய
பாசவினைகள் பற்றது நீங்கி உன் பதம் பெறவே உன்னருளாக
அன்புடனிரட்சி அன்னமுஞ் சொன்னமும் மெத்த மெத்தாக வேலாயுதனார்
சித்திபெற்றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத்துவசம் வாழ்க
வாழ்கவென் வருமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்யினும் பெற்றவன் நீ குரு பொறுப்பதுன் கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே பிள்ளையென்றன்பாய்ப் பிரியமளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந்தருளி தஞ்சமென்றடியார் தழைத்திட வருள் செய்
கந்தர்சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசாரத்துடன் அங்கந்துலக்கி
நேசமுடனொரு நினைவதுவாகிக் கந்தர் சஷ்டி கவசமிதனை
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒரு நாள் முப்பத்தாறுருக் கொண்டு

ஓதியே செபித்து உகந்து நீரணிய அஷ்டதிக்குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்னரெண்மர் செயலதருளுவர் மாற்றலரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோண்மகிழ்ந்து நன்மையளித்திடும் நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர் கந்தர்கை வேலாங் கவசத்தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெறுண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப் பொடியாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்காரத்தடி அறிந்தெனதுள்ளம் அஷ்ட லக்ஷ்மிகளில்
வீர லக்ஷ்மிக்கு விருந்துணவாக சூரபத்மாவைத் துணித்த கையதனால்
இருபத்தேழ்வர்க் குவந்தமுதளித்த குருபரன் பழனிக் குன்றினிலுருக்கும்

சின்னக் குழந்தை சேவடி போற்றி! எனைத் தடுத்தாட்கொள்ள எந்தனதுள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி! தேவர்கள் சேனாபதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி! திறமிகு திவ்ய தேகா போற்றி!
இடும்பாயுதனே இடும்பா போற்றி! கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி! உயர்கிரி கனக சபைக்கோர் அரசே
மயில் நடமிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரஹணபவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.

பக்திப்பாடல்கள் பட்டியல்