![]() |
![]() |
ஆடி அடங்கும் வாழ்க்கையடாஆறடி நிலமே சொந்தமடா (ஆடி) முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா - கண் மூடினால் காலில்லாக் கட்டிலடா (ஆடி) சிரிப்பவன் கவலையை மறக்கின்றான் தீமைகள் செய்பவன் அழுகின்றான் இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை இறந்தவன் அல்லவோ திறக்கின்றான் (ஆடி) வகுப்பார் அது போல் வாழ்வதில்லை வந்தவர் யாருமே நிலைப்பதில்லை தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை (ஆடி) திரைப்பாடற் பட்டியல் | ||