Google
 
Web www.mazalais.com

Enable unicode to view Tamil contents

புத்தி சிகாமணி பெத்த பிள்ளை

சிறு குடும்பம் சீரான குடும்பம் எனும் பொன்மொழியை உணராமல்
ஆறு குழந்தைகளைப் பெற்று அவதிப்படும் கணவன் நடிகவேள் எம்.ஆர். ராதா மனைவியுடன் தங்கள் ஆறவது குழந்தையைத் தொட்டிலிலிட்டுப் பாடும் தாலாட்டு. இக்காட்சி இடம்பெற்ற படம் இருவர் உள்ளம்.

மனைவி: புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை - இது
                    புன்னகை செய்யுது சின்னப் பிள்ளை
கணவன்: (லொளலொளலொளாயி)
மனைவி: அஞ்சுக்குப் பின்னாலே வந்த பிள்ளை - இது
                    ஆறாவதாய் வந்த செல்லப் பிள்ளை;

கணவன்: ஆராரோ அடி ஆராரோ, ஆரோ
                    அசட்டுப் பய பிள்ள ஆராரோ

மனைவி: புருசஷன் மனதிலே பூத்திருந்தேன் -
கணவன்: ஆமாமா
மனைவி: தினம் பொழுதும் இரவுமாய் வாழ்ந்திருந்தேன்
கணவன்: ஆமாமா
மனைவி: வருஷம் ஒரு பிள்ளை பெற்றெடுத்தேன் - இப்போ
                    வயசு இருபத்தி ஆறாச்சு
கணவன்: ஐயய்யோ ஐயையோ ஆராரோ - ஒங்க
                    அம்மா கதைய நீ கேளாயோ?
மனைவி: ஆராரோ அடி ஆராரோ, ஆரோ
                    அசட்டுப் பிள்ள ஆராரோ

கணவன்: ஆறு பிறந்தது போதுமென்று நான்
                    ஆறு குளமெல்லாம் மூழ்கி வந்தேன்
                    காசி ராமேஸ்வரம் சென்று வந்தேன் - பாழும்
                    காதலினாலே திரும்பி வந்தேன்
மனைவி: போகாது ஐயா, போகாது - எங்கு
                    போனாலும் ஆசை போகாது
கணவன்: ஆராரோ அடி ஆராரோ - ஆரோ
                    அசட்டுப் பய புள்ள ஆராரோ

மனைவி: ஆசைக்குப் பிள்ளை ஆராச்சு, ஆராச்சு -
கணவன்: இனி அறுத்துத் தடை செய்ய ஆராய்ச்சி, ஆராய்ச்சி
மனைவி: நாம ஆசையுடன் பேசி நாளாச்சு
கணவன்: ஆபத்து அங்கே தான் உருவாச்சு
மனைவி: ஆசையுடன் பேசி நாளாச்சு
கணவன்: ஆபத்து அங்கே தான் உருவாச்சு
                    ஆனாலும் தூங்குது உன் பாட்டு - இனி
                    அடுத்தது நீயுந்தான் தாலாட்டு
மனைவி: ஆராரோ அடி ஆராரோ, ஆரோ
                    அசட்டுப் பய புள்ள ஆராரோ

திரைப்பாடற் பட்டியல்
Your feedback about this site and contents will be of immense help