Google
 
Web www.mazalais.com

Enable unicode to view Tamil contents

கீதா உபதேசம்

பஞ்ச பாண்டவர்களுள் வீரத்திலும் வில் வித்தையிலும் சிறந்து விளங்கிய அர்ஜுனன் மஹா பாரதப் போர்க்களமான குரு க்ஷேத்ரம் எனும் யுத்த பூமியில் போர் துவங்கும் முன்னர் எதிரிகளின் வரிசையில் தன் பாட்டனார் பீஷ்மர், குரு துரோணர், குல குரு கிருபாச்சாரியார் மற்றும் துரியோதனனுடன் சேர்த்துத் தன் பெரியப்பா வழிச் சகோதர்களும் வேறு பல உறவினர்களும் நிற்கக் கண்டு சிந்தை தடுமாறும் பொழுது அவனுக்குத் தேரோட்டியாய் அமைந்த பகவான் கிருஷ்ணன் கடமையை உபதேசிக்கும் பகவத் கீதை.

இப்பாடல் காட்சியில். கண்ணனாக நடித்தவர் முன்னாள் ஆந்திர முதல்வரும், பழம் பெரும் தெலுங்குத் திரைப்பட முன்னணி நடிகருமான என்.டி. ராமராவ். அர்ஜூனனாக நடித்தவர் பழம்பெரும் தமிழ் குணசித்திர நடிகர் முத்துராமன்

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!
மரணத்தின் தன்மை சொல்வேன்;
மானிடர் ஆன்மா மரணமெய்தாது,
மறுபடிப் பிறந்திருக்கும்;
மேனியைக் கொல்வாய்! மேனியைக் கொல்வாய்!
வீரத்தில் அதுவும் ஒன்று;
நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி,
வெந்து தான் தீரும் ஓர் நாள்.

என்னை அறிந்தாய், எல்லா உயிரும்,
எனதென்றும் அறிந்து கொண்டாய்;
கண்ணன் மனது கல் மனதென்றோ
காண்டீபம் நழுவ விட்டாய்
காண்டீபம் நழுவ விட்டாய்
மன்னரும் நானே, மக்களும் நானே,
மரம் செடி கொடியும் நானே;
சொன்னவன் கண்ணன், சொல்பவன் கண்ணன்;
துணிந்து நில் தர்மம் வாழ.

புண்ணியம் இதுவென்றிவ் வுலகம் சொன்னால்,
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே;
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே.

கண்ணனே காட்டினான், கண்ணனே சாற்றினான்;
கண்ணனே கொலை செய்கின்றான்.
காண்டீபம் எழுக! நின் கை வன்மை எழுக!
இக்களமெலாம் சிவக்க வாழ்க!

பரித்ராணாய சாதூனாம்,
விநாசாய சதுஷ்க்ருதாம்;
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய,
சம்பவாமி யுகே யுகே.

திரைப் பாடல்களின் பட்டியல்

Your feedback about this site and contents will be of immense help