![]() |
![]() |
கொஞ்சு மொழி சொல்லும் கிளி - தாலாட்டுகணவனைப் பிரிந்து கைக்குழந்தையுடன் வாழ்க்கைப் போராட்டத்தில் ஏழ்மையில் வாடும் கல்யாணி, இந்தியாவை விட்டுப் பிழைப்புக்காக பர்மா சென்றுள்ள தன் மூன்று அண்ணன்மார்களும் தாய்நாடு திரும்பி வந்து, தன்னையும் தன் குழந்தைகளியும் என்று காப்பார்களோ என்ற ஏக்கத்துடன், தன் குழந்தைக்காகப் பாடும் தாலாட்டு.
கொஞ்சு மொழி சொல்லும் கிளியே - செழுங்
கோமளத் தாமரைப் பூவே - ஒரு வஞ்சமில்லா முழு மதியே - இன்ப வானி உதித்த நல்லமுதே, கண்ணே! கண் மணியே கண்ணுறங்காயோ? மாமன்மார் மூவர் தம்பி - நல்ல வாழ்வளிக்க வருவார் - உனக்கு மாமன்மார் மூவர் தம்பி - நல்ல வாழ்வளிக்க வருவார் - உந்தன் மாம்பழக் கன்னத்திலே - முத்த மாரி பொழிந்திட வருவார் - உந்தன் மாம்பழக் கன்னத்திலே - முத்த மாரி பொழிந்திட வருவார் - கண்ணே கண் மணியே, கண்ணுறங்காயோ? மாணிக்கப் பாலாடை - பச்சை மாமணித் தொட்டிலுடன் - வெள்ளி யானையும் வாகனமாய் - மாமன் தருவார் சீதனமாய், கண்ணே கண் மணியே கண்ணுறங்காயோ? வெள்ளியினால் செய்த ஏட்டில் - நல்ல வைர எழுத்தாணி கொண்டு - நல்ல தெள்ளு தமிழ்ப் பாடம் தெளிய - உன்னைப் பள்ளியில் சேர்த்திட வருவார் - மாமன் அள்ளி அணைத்திட வருவார் - கண்ணே கண் மணியே! கண்ணுறங்காயோ? (கொஞ்சு மொழி) திரைப்பாடற் பட்டியல் |