Google
 
Web www.mazalais.com

Enable unicode to view Tamil contents

தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே

தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணி முத்தே
தொட்டில் மேலே முத்து மாலை
வண்ணப் பூவா விளையாட - சின்னத்
தம்பி இசை பாட

                                                                                          (தூளியிலே)

பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்ட மரம் பூ மலரும் பாறையிலும் நீர் சுரக்கும்
ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்டை எட்டுக் கட்டை தெரிஞ்சா நான் படிச்சேன்
நான் படைச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்
ஏடெடுத்துப் படிச்சதில்லே சாட்சி இந்த பூமிதான்

                                                                                          (தொட்டில் மேலே)

சோறு போடத் தாயிருக்கா பட்டினியப் பாத்ததில்லே
தாயிருக்கும் காரணத்தால் கோவிலுக்குப் போனதில்லே
தாயடிச்சு வலிச்சதில்லே இருந்தும் நானழுவேன்
நானழுகத் தாங்கிடுமா உடனே தாயழுவா
ஆக மொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள தான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்ல தான்

                                                                                          (தொட்டில் மேலே)

திரைப்பாடற் பட்டியல்
Your feedback about this site and contents will be of immense help