![]() |
![]() |
|
|
பழங்கால கிரேக்கக் கலாச்சாரம் மனிதத் தன்மைகளை, மனிதனின் திறமைகளை வெளிக் காட்டுவதில் பிரபலமானது. இந்த கிரேக்கக் கலாச்சாரம் எங்கே தொடங்கியது? எப்போது தொடங்கியது? கிரேக்கக் கடவுளர்களின் கதை எப்படி இருந்தது?
உலகம் என்று நாம் அழைக்கும் இந்த பூமி 470 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகத் தொடங்கியது என்பது அறிஞர்களின் கருத்து. கடந்த ஐந்தாயிரம் ஆண்டு கால இடைவெளியில் வெவ்வேறு காலக்கட்டத்தில் உலகில் 19 இடங்களில் முக்கியமான நாகரிகங்கள் தோன்றின. அதில் ஒன்று தான் கிரேக்க நாகரிகம். இந்த நாகரிகம் மத்திய தரைக் கடல் பகுதியில் உள்ள கிரேட் என்ற மிகச் சிறிய தீவில் தொடங்குகிறது. சுமார் கி.மு. 3000 காலங்களிலில் இந்தத் தீவில் மினோ மைசீனிய மக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் தான் இன்றைய ஐரோப்பியக் கலாச்சாரத்திற்கு அடித்தளம் இட்டனர். ஆசிய கண்டத்திலிருந்து கடல் பயணம் செய்து வந்த மீனவர்கள் இந்தத் தீவில் குடியேறியிருக்கலாம் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். தமிழர்களின் தொன்மையை ஆராய்ந்த ஹெரோடொடுஸ் என்ற வரலாற்றாசிரியர் சொல்லும் ஒரு குட்டி கொசுறுச் செய்தியாக இன்னோரு ஆச்சிரியமான விஷயம் ஒன்றும் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். இந்தத் தீவில் குடிவந்த இந்த மீனவர்களே மீனோஸ் என்று வரலாறு குறிப்பிடுகிறது. இவர்கள் தங்களை தெமிலியர் என்று அழைத்துக் கொண்டார்கள். அவர்களுக்குப் பாண்டியன் என்ற மன்னனும் இருந்திருக்கிறான். ஒருவேளை முதல் தமிழ் சங்கத்தைக் கடல் கொண்டதே, அந்த காலத்தில் இந்த மீன்வர்கள் பாண்டிய நாட்டை விட்டுக் கிளம்பியிருப்பார்களோ? தெரியவில்லை. நீங்கள் பெரியவர்களாகிக் கண்டுபிடித்து புதிய உண்மைகளைச் சொல்வீர்களோ? மீனவக் கூட்டமாக ஆரம்பித்த கிரேக்கக் கலாச்சாரம் கி.மு. 2000 ஆண்டுகளில் ஒரு வளர்ந்த கலாச்சாரமாகத் திகழந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதி வரை கிரேக்க நாகரிகம் பற்றிய உண்மைகள் அந்த கலாச்சாரத்தைப் பின்பற்றிய கதைகளிலும் இலக்கியத்தின் மூலமும் தான் உலகத்திற்குத் தெரிந்திருந்தது. இந்த கிரேக்கக் கதைகள் பெரும்பாலும் அவர்களது கடவுளர்களைப் பற்றியதாக இருக்கும். பல தொன்மையான கலாச்சாரங்களைப் போல கிரேக்கக் கலாச்சாரமும் கிறிஸ்துவின் பிறப்பிற்கு முன் பல கடவுளர்களை வணங்கும் கலாச்சாரமாக இருந்தது. கிரேக்கக் கடவுளர்களின் மிக முக்கியமானவர் ஜீயஸ் என்பதைப் போன முறையே பார்த்தோம். அவர் கடவுளானதே ஒரு கதை தான். ஜூயஸின் கதை ஒன்றுமேயில்லாத ஒரு இருளிலிருந்து தோன்றியது மாபெரும் சமுத்திரம். சமுத்திரத்தை ஆண்டது ஓசானியா என்னும் கடவுள். அது யுரேனமி என்ற பெண் கடவுளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. கதைப்படி இந்தப் பிரபஞ்சத்தில் நடப்பது எல்லாம் இந்தப் பெண் கடவுளின் ஆணையாக இருந்தது. யுரோனமி என்ற அழகிய பெண் கடவுள் இருளாய் இருந்த குழப்பமான சூழ்நிலையை ஒரு ஒழுங்கு முறைக்குக் கொண்டு வர நினைத்து அந்த இருட்டில் நடனமாடத் தொடங்கினாள். இதனால் மஹாப் பெரிய சமுத்திரத்திலிருந்து வானம் பிரிந்து வந்தது. இதனால் “கையா” என்ற பூமித் தாயும் யுரேனஸ் என்ற வானமும் பிறந்தார்கள். அது மட்டுமல்லாமல் டாரடரஸ் என்ற பாதாள உலகமும் தோன்றியது. காலாவும் யுரேனஸுக்கும் பிறந்த மகன் தான் டைட்டன்ஸ் என்ற ஆற்றல் மிகுந்த அரக்கர் குலம் தோன்றியது. இவர்களின் புதல்வர்களாக நடு நெற்றியில் ஒற்றைக் கண்ணும் ஆயிரம் கரம் கொண்ட மூன்று அரக்கர்களும் தோன்றினார்கள். அவர்களின் தோற்றத்தை விரும்பாத யுரேனஸ் அவர்கள் பூமித் தாயின் மடியிலேயே சிறை இருக்கும் படியாக உத்தரவிட்டான். காலம் கனிந்த போது தன் தந்தையிடமிருந்து வன்முறையாகத் தலைமைப் பதவியைப் பறித்துக் கொண்டான் க்ரோனியஸ். அவனுடைய தந்தையும் தாயும் அவனை அணுகி, "மகனே, க்ரோனியஸ், உன் மகன்களில் ஒருவன் உன்னை இந்த அரச பதவியிலிருந்து தள்ளி விடுவான் என்று எச்சரித்தனர். இதனால் கோபம் கொண்ட அரசன் தனக்குப் பிறந்த குழந்தைகளை விழுங்கத் தொடங்கினான். தன்னுடைய முதல் ஐந்து குழந்தைகளை இப்படியாக க்ரோனியஸ் விழுங்கியதைக் கண்ட அவனது தாய் “கையா” அவன் மேல் மிகுந்த கோபம் கொண்டாள். ஆறாவதாக க்ரோனியஸிற்கு ஒரு குழந்தை பிறந்த போது அதை அவனிடமிருந்து பிரித்து கிரேட் தீவிற்கு அனுப்பினாள். ஒரு குளவிக் கல்லைத் துணியில் சுற்றி இது தான் உன்னுடைய குழந்தை என்று அரக்க மன்னனிடம் காட்டினாள். தாயின் செயலை அறியாத மன்னனும் ஆறாவதாகத் தனக்குப் பிறந்தது கல் என்றெ நம்பினான். அதையும் விழுங்கினான். அமைதியான கிரேட் தீவில் குழந்தை ஜூயஸ் ஒரு மாய ஆடு பாலூட்டி வளர்க்க மாபெரும் வீரனாக வளர்ந்து வந்தான். சரியான சமயத்தில் ஜியஸ் வீர வாலிபனாகத் தன் நாட்டிற்குத் திரும்பினான். ஜூயஸ் தன் மகன் என்று அறியாத கிரோனியஸ் அவனுடன் போர் புரிய ஆரம்பித்தான். க்ரோனியஸ் தான் தன் தந்தை என்று அறிந்து கொண்ட ஜூயஸ் அவரை அழிக்கத் தன் சகோதரர்களின் உதவியை நாடினான். தந்தையின் வயிற்றில் இருக்கும் அவர்களால் என்ன செய்ய முடியும்? ஜூயஸுக்கு அவன் முதல் மனைவி உதவிக்கு வந்தாள். ஒரு மருந்தை க்ரோனியஸுக்குக் கொடுத்து அவன் விழுங்கிய குழந்தைகளை வாந்தி எடுக்கச் செய்தாள். இந்தக் குழந்தைகள் ஜூயஸின் ஆணைக்கு உட்பட்ட கடவுளர்களாக சித்தரிக்கப் பட்டார்கள். முதல் குழந்தை தான் கன்னி தெய்வமான “ஹெஸ்டியா”, இவள் அக்னி தேவதை. இரண்டாவது பெண் குழந்தை “டிமெட்டர்”, இவள் தானியங்களின் தேவதை. செழுமைக்கும் வளமைக்கும் இவளை கிரேக்கர்கள் வணங்கினார்கள். மூன்றாவது “ஹீரா “ என்ற பெண் தெய்வம், இவள் திருமணங்களின் தேவதையாக வழிபடப்பட்டாள். நான்காவது "ஹேடீஸ்" என்பவர் மரணத்தின் கடவுளாக இருந்தார், பூமியின் செல்வங்களின் அதிபதியாகவும் கருதப்பட்டார். ஜீயஸின் ஐந்தாவது சகோதரன் பொஸிடியன் தான் கடல்களின் கடவுள். அவரைப் பற்றி முன்னமே நான் பார்த்தோம். தன்னுடைய ஐந்து உடன் பிறந்தவர்களோடு சேர்ந்து தன் தந்தையைப் போரில் வெல்லத் திட்டமிட்டான் ஜூயஸ். ஒலிம்பிய மலையில் வாழ்ந்ததால் அவர்கள் ஒலிம்பியர்கள் என்று அழைக்கப் பட்டனர். ஓலிம்பியர்கள் டைட்டனியர்களுடன் பத்து ஆண்டுகள் போரிட்டனர். ஜீயஸால் போரில் எளிதில் வெற்றி பெற முடியவில்லை. அதன் காரணம் அட்லஸ். அட்லஸ் உங்களுக்கெல்லாம் தெரிந்த ஒரு கதாபாத்திரம். ஹெர்குலீஸ் பற்றிக் கேள்விப் பட்டீருக்கிறீர்கள் தானே? அந்தக் கதையில் வரும் அட்லஸ் தான் டைட்டனியர்களுக்கு உதவி செய்தான். அட்லஸின் உதவி இருந்ததினால் ஜீயஸ் எளிதாக வெற்றி பெற முடியவில்லை. இந்த வேளையில் பூமித்தாய் கையா தன் மடியில் சைக்ளோடாப்ஸ் சகோதரர்களையும் பாதாளத்தில் சிறையிருக்கும் மற்ற அரக்கர்களையும் விடுவித்து அவர்களின் உதவியை நாடும் படி சொன்னாள். பூமித் தாயின் அறிவுரையைப் பின் பற்றி ஜூயஸ் பாதளம் சென்று அனைவரையும் விடுவித்தான். அவனுக்கு உதவியாக வந்த சைக்ளோடாப்ஸ் ஜீயஸுக்கு இடியையும் மின்னலையும் ஆயுதங்களாகக் கொடுத்தனர். போஸிடனுக்குத் திரிசூலத்தை ஆயுதமாகக் கொடுத்தனர். ஹேடீஸ் இருட்டைத் தனது கவசமாகப் பயன்படுத்த உதவி செய்தனர். ஹேடீஸ் இருட்டைப் பயன்படுத்தி க்ரோனியஸின் ஆயுதங்களைத் திருடிக் கொள்ள ஜூயஸும் போசிடனும் தங்கள் ஆயுதத்தையும் பலத்தையும் பயன்படுத்தி க்ரோனியஸை வீழ்த்தினான். தோற்றவர்கள் பாதாள உலகிற்குத் தள்ளப்பட்டனர். அட்லஸுக்கு மட்டும் வானம் கீழே விழுந்து விடாமல் பிடித்துக் கொள்ளும் தண்டனைத் தரப்பட்டது. கடவுளர்களுக்குக் கடவுளாய்த் தன்னை அமர்த்திக் கொண்ட ஜூயஸ் பல காலம் கிரேக்க மக்களின் உன்னதக் கடவுளாக அவர்கள் அன்றாட வாழ்க்கையிலும் கிரேக்க இலக்கியங்களிலும் இடம் பெறுகிறார். |
Your Feedback for this story |