Google
 
Web www.mazalais.com

Enable unicode to view Tamil contents

கலங்கரை விளக்கு

மீனா எங்களுடன் விளையாட வருகிறாயா? நாங்கள் சுந்தரி வீட்டில் விளையாடி விட்டுத்தான் வீட்டிற்குப் போகப் போகிறோம். என்றபடிமீனாவின் பின்னால் வந்தாள் செல்வி

சைக்கிளில் புத்தகப்பையை வைத்துக் கொண்டிருந்த மீனா திரும்பினாள். ஓ செல்வி உன்னோடு வருவதற்கு எனக்கு ஆசை தான்.ஆனால் இன்று தேர்வு முடிந்தவுடன் நேராக வீட்டிற்கு வருவதாக அம்மாவிற்கு வாக்குக் கொடுத்து இருக்கிறேன். என்று சொல்லி விட்டு சைக்கிளில் ஏறியவள். போய் வருகிறேன் செல்வி. அரையாண்டு விடுமுறையை சந்தோஷமாகக் கழி என்று சொல்லி விட்டு சைக்கிளை மிதித்துக் கொண்டு போய் விட்டாள் மீனா

எப்போதுமே இந்த மீனா இப்படித்தான். ரொம்ப பிகு பண்ணுவாள் நீ வா செல்வி நாம் என் வீட்டுக்குப் போகலாம் என்ற சுந்தரியுடன் சென்றாள் செல்வி. அவளுக்கு யோசனையாக்வே இருந்தது. அரையாண்டு விடுமுறையின் போது கூட இந்த மீனாவிற்கு விளையாட வேண்டும் என்றுத் தோணவில்லையே அவளுக்குப் புரியவில்லை. இருந்தாலும் சுந்தரியுடன் விளையாடும் உற்சாகத்தில் அவளுடன் சென்றாள்.

இன்றோடு அவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு முடிந்து விட்டது. அதனால் வீட்டுப்பாடம் பற்றிக் கவலைப் படமால் விளையாடலாம் என்ற எண்ணம் கொண்டிருந்த இரு சிறுமிகளும் ந்னறாக சேர்ந்து விளையாடினார்கள்.வண்ணங்கள் கொண்டு படங்கள் தீட்டினார்கள். சுந்தரியின் தாய் செய்து கொடுத்த சுவையான சிற்றுண்டியை சிரிப்பும் கேலியுமாய் உண்டார்கள். சுந்தரியின் மனதோரத்தில் மீனா ஏன் இப்படி சந்தோஷமாய்ப் பொழுதைக் கழிக்காமல் படிப்பு படிப்பு என்று இருக்கிறாள் என்று தோன்றியது மனதில் தோன்றியதை சுந்தரியிடமே கேட்டாள்.

ஏன் சுந்தரி இந்த மீனாவும் நம்முடன் விளையாட வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அவள் வர மாட்டேன் என்று சொல்லி விட்டாள் பார் என்று குறை பட்டாள். நாம் ஒன்றும் வீணாக நேரத்தை செலவிடவில்லையே நல்ல முறையில் தானே விளையாடினோம் என்று சுந்தரியும் தன் மனதில் இருந்ததைச் சொன்னாள். அவளுக்குத் திமிர். தான் தான் வகுப்பில் முதலில் வருகிறோம் என்று சொல்லாமல் சொல்லிக் காட்டுகிறாள் என்றாள்.

அருகே நின்றிருந்த சுந்தரியின் தாயார் உடனே சுந்தரி நீ உண்மை தெரியாமல் யாரைப் பற்றியும் தவறாகப் பேசக் கூடாது. நீங்கள் சிற்றுண்டி சாப்பிட்டானதும் நாமே மீனாவின் வீட்டிற்குச் சென்று பார்ப்போம். வேண்டுமானால் நீங்கள் அங்கே மீனாவுடன் விளையாடுங்கள். பின் நாம் செல்வியை அவள் வீட்டில் விட்டு விட்டு நாம் வீடு திரும்புவோம். என்றார். சிறுமிகள் இருவரும் அதை ஒத்துக் கொண்டனர். மூவரும் கிளம்பி மீனாவின் வீட்டிற்குச் சென்றனர். அங்கே மீனாவின் வீட்டில் நடப்பதை கண்டு வியந்தனர்.

அங்கு பத்து மாணவர்கள் உட்கார்ந்து சிரத்தையாக ஆங்கிலப் பாடத்தைப் படித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு மீனாவும் அவளுடைய தாயும் அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தனர்.இவர்களைப் பார்த்தும் மீனா மிகவும் சந்தோஷப்பட்டாள். வா சுந்தரி, வா செல்வி என்று அவர்களை அழைத்துப் போய் அங்கு படித்துக் கொண்டிருந்தவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தாள்.ஒரு வெட்கப் புன்னகையுடன் அவர்கள் சுந்தரியிடமும் செல்வியிடமும் பாடம் பற்றி சந்தேகம் கேட்டனர். சுந்தரியின் தாய் மீனாவின் தாயிடம் சந்தேகத்தைக் கேட்டார். இவர்கள் எல்லாம் யார்? “ நீங்கள் டியூஷன் சொல்லிக் கொடுக்கிறீர்களா? என்ன? அதற்கு மீனாவின் தாயர். இந்தக் குழந்தைகள் கொத்தடிமைகளாக விற்கப் பட்டவர்கள். அண்மையில் அரசாங்கம் இவர்களை மீட்டு இவர்களுக்காக முறைசாரா நிலவொளிப் பள்ளிக் கூடத்தை காஞ்சிபுரத்தில் நிறுவியுள்ளது. அவர்கள் சீக்கிரமே எட்டாம் வகுப்புத் தேர்வு எழுத இருக்கிறார்கள். அதனால் என்னால் முடிந்த உதவியை அவ்வப்போது செய்வேன். மீனா அவர்களுடன் சேர்ந்து படிக்கும் போது அவர்களும் உற்சாகமாகப் படிப்பார்கள் என்று விளக்கம் கொடுத்தார். ஓ நல்ல விஷயமாயிற்றே சிறு வயதிலேயே தொண்டு செய்யும் ஆசையை குழந்தைகள் மனதில் விதைப்பதும் நல்லது தானே என்றார் சுந்தரியின் தாயார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த செல்வியும் சுந்தரியும் கூட அவர்கள் அருகில் வந்தார்கள். அம்மா இவர்கள் பட்ட துன்பத்தையெல்லாம் நானும் செல்வியும் இந்த அரையாண்டு விடுமுறையில் படமாக சித்தரிக்கப் போகிறோம் என்றாள் சுந்தரி ஓ நல்லது. நீங்கள் வரையும் படங்களை குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றிய விழிப்புணர்வை தர பயன்படுத்தலாம் என்றார் மீனாவின் தாயார். அது மட்டுமல்ல உங்களைப் போல குழ்ந்தைகள் துன்பப்படும் கொத்தடிமைகளுக்கு நம்பிக்கை கொடுக்கும் கலங்கரை விளக்காக இருக்க வேண்டும். அவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும் என்றார். அப்போது தான் நம் குடியரசுத்தலைவரின் கனவு நினைவாகுமென்று சொன்னார் சுந்தரியின் தாய் மீனாவை அணுகிய சுந்தரியும் செல்வியும் அவள் தோளில் கைப் போட்டுக் கொண்டனர். அவளைத் தவறாக நினைத்தற்கு மன்னிப்புக் கேட்டனர். மீனாவும் தன் தோழிகளை மன்னிக்க மூவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி எதிர்கால பாரதத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாக சிரித்தனர்.

மற்ற கதைகள்

Your Feedback for this Story

Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazalais.com newsletter?Yes
No

* Required